அமெரிக்காவில் மின்னணு செயற்கை உறுப்பை பொருத்தி முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபரை நடக்க வைத்து சாதனை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் மின்னணு செயற்கை உறுப்பை பொருத்தி முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபரை நடக்க வைத்து சாதனை

அமெரிக்கா: அமெரிக்காவில் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் 5 ஆண்டுகளாக உணர்வற்று நடக்க முடியாமல் இருந்த நபரை மின்னணு செயற்கை உறுப்பின் உதவியுடன் மருத்துவர்கள் நடக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். ஜெர்டு சின்னாக் என்ற இளைஞர் கடந்த 2013 ஆம் ஆண்டு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இதில் அவரது முதுகுத் தண்டுவடம் கடுமையாக அடிபட்டு மூளைக்குச் செல்லும் நரம்புகள் செயலிழந்தது. இதனால் அந்த இளைஞரின் இடுப்புக்குக் கீழே செயலற்றுப் போனதுடன், நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையானார். அவருக்கு மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மேயோ மருத்துவமனையில் நரம்பியல் வல்லுநர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் மின்னணு செயற்கை உறுப்பொன்றை பாதிக்கப்பட்ட தண்டு வடத்தில் பொருத்தி மூளைக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நரம்பைச் செயல்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்பக்கத்தில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாக்கரின் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவர்கள் தற்போது நடக்க வைத்துள்ளனர்.

மூலக்கதை