உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஷுக்கள் துபாய்யில் அறிமுகம்

தினகரன்  தினகரன்
உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஷுக்கள் துபாய்யில் அறிமுகம்

துபாய்: உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஒரு ஜோடி ஷூ-க்களை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளது. அகியா அரபு நாடான துபாயில் 17 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.123 கோடி மதிப்பிலான ஒரு ஜோடஈ ஷூ-க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூவை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளது.இந்த ஷூவை தயாரிப்பதற்கு சுமார் 9 மாதகாலம் ஆகியதாக தெரிவித்தனர். முழுவதும் தங்கம் மற்றும் வைர கற்களால் ஆனா இந்த ஷூ-வந்து புர்ஜ் அல் அராப் எனும் 7 நட்சத்திர ஹோட்டலில் இன்று அறிமுகப்படுதப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘டெப்பி விங்ஹாம்’ ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு 15.1 மில்லியன் டாலர்கள் ஆகும்.

மூலக்கதை