புதுச்சேரியில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய நிலுவை குறித்து இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு நேற்று அழைப்பு விடுக்க பட்ட நிலையில், பொது மேலாளர் வராததால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அம்மாநிலம் மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 137 பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு மாத நிலுவை ஊதியம் தொடர்பாக பொதுமேலாளர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு தீர்வு காணும் வரை பேருந்துகளை இயக்க போவது இல்லை என்றும் போக்குவரத்துக்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர்.

மூலக்கதை