தமிழகத்தில் அடிமை ஆட்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் அடிமை ஆட்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். அவர் பேசுகையில், ‘அமமுகவுக்கு தமிழகத்தில் கிளை இல்லாத ஊரே இல்லை. ஒரு கோடி உறுப்பினர்களை தாண்டி 2 கோடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் எம். ஜி. ஆர். ஆட்சி செய்தார்.

பின்னர் அதிமுகவை ஜெயலலிதா 30 ஆண்டு காலம் கட்டிக் காத்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடைபெறுகிறது.
டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ. என். ஜி. சி.

போன்ற திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தி வைத்திருந்தார். இப்போது அடிமையாக உள்ள இந்த ஆட்சியாளர்கள் அது பற்றி கண்டுகொள்வதே இல்லை.

வேளாங்கண்ணி பகுதியில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்ற செய்தியை அறிந்தேன். ஆறு, வாய்க்கால்களை தூர் வாராததால் தான் இன்னும் தண்ணீர் வராமல் உள்ளது.

தடுப்பணை இருந்தால் தண்ணீர் தேக்கப்பட்டிருக்கும்.

அதிமுகவில் இருந்து சசிக்கலாவையும், என்னையும் நீக்கினார்கள். ஆர். கே. நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தார்கள்.

தமிழக மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு தினகரன் பேசினார்.   இன்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தினகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்.

.

மூலக்கதை