திருச்சியில் அரசியலமைப்பு சட்ட மாநாடு: ஜவாஹிருல்லா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருச்சியில் அரசியலமைப்பு சட்ட மாநாடு: ஜவாஹிருல்லா பேட்டி

திருச்சி: திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: திருச்சியில் மமக சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

முக்கிய கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அரசியல் நிர்ணய சபை வழங்கியுள்ள அடிப்படை கூறுகளான மதசார்பின்மை, ஜனநாயகம், சமதர்மம் போன்றவற்றை மோடி அரசு சிதைத்து வருகிறது.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இருந்து மாறி ஆர்எஸ்எஸ் கொள்கையை ஒத்து ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.

இசைவு பட்டியலில் உள்ள கல்வியில் மோடி அரசு நுழைந்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நீட் தேர்வு தமிழகத்தில் புகுத்தப்பட்டு விட்டது.

முத்தலாக் சட்டம் மாநிலங்களவையில் விவாதமாக இருக்கும் போதே மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது அரசியலமைப்பை மீறிய செயலாக உள்ளது. இதை வலியுறுத்தி மாநாட்டில் அரசியலமைப்பு சட்டம் குறித்து ெபாதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மோடி அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து வருவதை அம்பலப்படுத்தும் விதமாக இருக்கும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

.

மூலக்கதை