முதல்வர் எடப்பாடி திருப்பதியில் சுவாமி தரிசனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் எடப்பாடி திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதையடுத்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

இரவு திருமலையில் தங்கிய அவர், ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை நடந்த வாராந்திர சேவையான அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

பின்னர் கோயில் எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட அவர், ேபடி ஆஞ்சநேயர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், உலக நன்மை வேண்டியும், மக்கள் நலனுக்காகவும் ஏழுமலையானை தரிசனம் செய்தேன் என்றார். மேலும் அவர், அரசியல் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை என்றார்.

உதவி செயலாளருக்கு உடல் நலம் பாதிப்பு
இதற்கிடையில், தமிழக முதல்வருடன் வந்த உதவி செயலாளர் கிரிதருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருமலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை ெபற்றார்.

அதன்பிறகு அவர் முதல்வருடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

.

மூலக்கதை