ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி..... நியூசிலாந்தில் விற்பனை நிறுத்தம்

தினகரன்  தினகரன்
ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி..... நியூசிலாந்தில் விற்பனை நிறுத்தம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நியூசிலாந்தில் ஸ்ட்ராபெரி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாகாணத்திலவிற்கப்படும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசியை மறைத்தவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ஸ் எனும் ஸ்ட்ராபெரி நிறுவனத்தில் இருந்து விற்பனையாகும் ஸ்ட்ராபெரி பழங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்றவாரம் முழுவதும் நியூசிலாந்தில் அப்பழங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது. இதுவரை வாங்கிய பழங்களை வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட்டில் திருப்பிக்கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரிகளை சிறுதுண்டுகளாக வெட்டி உண்ணுமாறு நியூசிலாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.   

மூலக்கதை