கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: மாஜி அமைச்சர் மகன் கடத்தவில்லை: ஆஜரான இளம்பெண் பரபரப்பு பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: மாஜி அமைச்சர் மகன் கடத்தவில்லை: ஆஜரான இளம்பெண் பரபரப்பு பேட்டி

தஞ்சை: சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விஜய் ராஜேஷ்குமார்(35). ஐ. டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி யாழினி(30). தஞ்சை அண்ணா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் யாழினி, 3ம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார்.

அதே வகுப்பில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரத்தீஷ்(30) படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் பழகி வந்தனர்.

இது யாழினியின் கணவர் விஜய் ராஜேஷ்குமாருக்கு தெரியவந்ததால் கண்டித்தார். ஆனால் ரத்தீசுடன் பழகுவதை யாழினி நிறுத்தவில்லை.

இதனால் சட்ட கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று யாழினியை அவரது கணவர் தடுத்தார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 11ம் தேதியில் இருந்து யாழினியை காணவில்லை என தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய் ராஜேஷ்குமார் புகார் செய்தார்.

அதில், மனைவியை  ரத்தீஷ் கடத்தி சென்றுவிட்டார், மனைவியை மீட்டு தருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ரத்தீஷ், உடந்தையாக செயல்பட்ட நண்பர் சுனில் ஆகியோர் மீது தஞ்சை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை ஜேஎம் 1 கோர்ட்டில் நீதிபதி விஜய் அழகிரி முன் விஜய் ராஜேஷ்குமார் மனைவி யாழினி நேற்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை ஐகோர்ட் கிளையில் யாழினி கணவர் விஜய் ராஜேஷ்குமார் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனால் மதுரை ஐகோர்ட்டில் நாளை(இன்று) ஆஜராகுமாறு உத்தரவிட்டார். கோர்ட்டுக்கு வெளியே வந்த யாழினி கூறுகையில், ‘என்னை யாரும் கடத்தவில்லை.

எனது கணவர் தவறான புகார் அளித்துள்ளார். நான் கல்லூரிக்கு சரியாக சென்று வருகிறேன்.

சந்தேகம் இருந்தால் எனது கல்லூரி வருகை பதிவுகளை பார்த்து கொள்ளுங்கள்’ என்றார்.

.

மூலக்கதை