கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

தினகரன்  தினகரன்
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேல் ரத்னா விருது வழங்கினார். டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் கோலிக்கு இந்த விருதை வழங்கினார். துரோணாச்சாரியார் விருது:குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதார்செனந்தா குட்டப்பாக்கும் துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சீனிவாச ராவுக்கும் வழங்கப்பட்டது. துரோணாச்சாரியார் விருது பெற்ற சீனிவாச ராவ் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவர். மேலும் கிரிக்கெட் பயிற்சியாளர் தாராசிங்ஹாவுக்கு, பளுதூக்கும் பாயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு, தடகள வீரர் வி.ஆர்.பீடுவுக்கும் துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து துரோணாச்சாரியார் விருது பெற்ற பீடுவுக்கு வாழ்நாள் சாதனைக்கான விருதும் தரப்பட்டது. ஆக்கி பயிற்சியாளர் கிளாரன்ஸ் லோபோக்கும், ஜீடோ பயிற்சியாளர் ஜீவன்குமாருக்கும் விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா விருது:ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருது வழங்கினார். அதனை தொடர்ந்து ஓட்டப்பந்தய வீரர் ஜின்சன் ஜான்சன், ஆசியப்போட்டியில் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்களை ஹீமாவுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் கோல்ஃப் வீரர் சுபாங்கர் சர்மா, ஆக்கி வீரர் மன்பீரீத் சிங்க்கும் விருது வழங்கப்பட்டது. வீராங்கனை நெலா குர்த்தி, குத்துசண்டை வீரர் சதிஷ்குமார் ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருது வழங்கினார்.

மூலக்கதை