குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி திருநீல பிரசாத் தெரிவித்துள்ளார். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை