சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!

தொடர்ச்சியான ஆறாவது மாதத்தில் சமையல் எரிவாயுவில் விலை மாற்றம் காண உள்ளது. இம்முறை 3.25 வீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகும்.
 
வருடம் ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து இந்த விலையேற்றம் செயற்பாட்டுக்கு வரும். தற்போதைய விலையில் இருந்து மொத்தமாக 3.25 வீதத்தால் விலையேற்றம் கண்டுள்ளது.  French Energy Regulatory Commission (CRE) இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதில் சமையலுக்காக மாத்திரம் பயன்படுத்துபவர்களுக்கு 1 வீதத்தாலும், சமையல் மற்றும் வெப்பத்துக்காக பயன்படுத்துபவர்களுக்கு 3.3 வீதத்தாலும் அதிகரிக்கப்பட உள்ளது. விலையேற்றம் காண்பது, இது தொடர்ச்சியான ஆறாவது மாதமாகும். 
 
கடந்த ஒரு வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாத்திரமே எரிவாயு விலை குறைவு ஏற்பட்டிருந்தது. ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிரான்சில் 4.5 மில்லியன் பயனாளர்களுக்கு இந்த விலை மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை