தாய் நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்...பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
தாய் நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்...பிரதமர் மோடி பேச்சு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உற்சாகமான லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார். உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில், பெருமிதம் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார். மேலும் தாய் நாட்டிற்கு சேவை செய்ய ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என மோடி கூறினார். 3 வாழ்நாள் சாதனையாளர்களை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். மகாத்மா காந்தி, தீன் தயாள் உபாத்யாயா, லோகியோ ஆகியோர் மக்கள் நினைவில் என்றும் இருப்பார்கள். அவர்களின் கொள்கைகள் நாட்டை வளர்க்க உதவியது எனவும் அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் மனிதநேயத்திற்கு பெயர் போன பாஜக தீன்தயாளின் கொள்கையை ஒவ்வொரு பாஜக தொண்டரும் பின்பற்றுகிறோம் என அவர் தெரிவித்தார்.பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. வளர்சசிக்கான திட்டத்தில் யாரையும் விட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். ஓட்டு வங்கி அரசியல், இந்தியாவை சீரழித்துள்ளது, இதனால் வாக்கு வங்கி அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மூலக்கதை