முதல்வர்கள் ஜுரத்தில் தெலுங்கு திரையுலகம்

தினமலர்  தினமலர்
முதல்வர்கள் ஜுரத்தில் தெலுங்கு திரையுலகம்

தமிழில் அரசியல்வாதிகளின் சுயசரிதையை படமாக்குவது என்பது புது விஷயம் இல்லை.. ஆனால் தெலுங்கில் அப்படி படங்களை பார்ப்பது அரிதுதான்.. ஆனால் இப்போது தெலுங்கு திரையுலகத்திற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை, ஒரே நேரத்தில் மூன்று முதல்வர்கள் பற்றிய படங்கள் உருவாக்கி வருகின்றன..

பிரபல நடிகரும் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர் வாழ்கை வரலாறு அதே பெயரிலேயே உருவாகி வருகிறது. இதில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே தந்தை வேடத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மம்முட்டி நடிப்பில், மர்மமாக மரணத்தை தழுவிய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் படம் 'யாத்ரா' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.

இவர்களாவது மறைந்த முதல்வர்கள்.. அவர்கள் வாழ்க்கையை படமாக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் தற்போதைய ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சாதனைகளை விளக்கும் விதமாக 'சந்ரோதயம்' என்கிற படம் தயாராகி வருகிறது. சந்திரபாபு நாயுடு கேரக்டரில் வினோத் நுவ்வுலா என்பவர் நடித்து வருகிறார்.

அடுத்து வரப்போகும் ஆந்திர மாநில தேர்தலுக்கான அரசியல் காய் நகர்த்தல்களாகத்தான் இந்த 'முதல்வர்' படங்கள் பார்க்கப்படுகின்றன.

மூலக்கதை