திருமணம் ஆசையோடு இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
திருமணம் ஆசையோடு இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்திரியாவில் தோழிகளுடன் டிராக்டரில் சென்ற போது டிரய்லர் கவிழ்ந்ததால், மணப் பெண் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆஸ்திரியாவின் Allhartsberg பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Jasmin Schwarnthorer என்ற 26 வயது இளம் பெண் தன்னுடைய திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால், 14 தோழிகளுடன் கொண்டாடுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். டிராக்டரை அவரது அண்ணன் Patrik ஓட்டியுள்ளார்.
 
அப்போது தோழிகள் மற்றும் Jasmin Schwarnthorer டிராக்டரின் பின்னால் இருக்கும் டிரய்லரில் நின்று கொண்டு வந்துள்ளனர்.
 
டிராக்டரை Patrik வேகமாக ஓட்டியதால், குறித்த இடத்தில் வளையும் போது டிராக்டரின் டிரய்லர் மட்டும் கவிழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் டிரய்லரில் இருந்த மணப் பெண் உட்பட தோழிகள் அனைவரும் கீழே விழுந்துள்ளனர். படுகாயமடைந்த தோழிகள் மற்றும் மணப்பெண் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியின் மூலம் Linz பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
இதில் 5 பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 7 பெண்களுக்கு லேசான காயம் தான் எனவும், மணப்பெண்ணான Jasmin Schwarnthorer கீழே விழும் போது, அங்கிருந்த கல்லில் அவரின் தலை பலமாக மோதியுள்ளது.
 
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த asmin Schwarnthorer பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டரை ஓட்டி வந்துள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
 
மேலும் இறந்த Jasmin Schwarnthorer அடுத்த மாதம் Bernhard என்பவருடன் திருமணம் நடைபெறவிருந்தது. இன்னும் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவரின் இறப்பு குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மூலக்கதை