முருகதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
முருகதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், 45வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதற்காக படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் படத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டு, முருகதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை