அன்றாட வாழ்வின் அங்கமாகியுள்ள ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஆண்ட்ராய்டிற்கு வயது 10

தினகரன்  தினகரன்
அன்றாட வாழ்வின் அங்கமாகியுள்ள ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஆண்ட்ராய்டிற்கு வயது 10

டெல்லி: நம் வாழ்வின் அடிப்படை அங்கமாகியிருக்கும் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு தொழிநுட்பத்தில் தான் இயங்குகின்றன. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. கூகுளால் வாங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் முதன்முதலில் HTC-ன் ஜி-1 ஸ்மார்ட்போனில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. HTC, மோட்டோரோலா, சாம்சங் ஆகிய நிறுவனங்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டதால் 2010-ம் ஆண்டு முதல் பிரபலமான இயங்குதளமாக மாறியது. 10 ஆண்டுகளில் ஆண்ட்ராய்டு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. உலகில் பயன்பாட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 88 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தான் பயன்படுத்துகின்றன. ஆண்ட்ராய்டை குறிக்கும் பச்சைநிற பொம்மை பக்டிராய்டு என அழைக்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. அனைத்து ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு இனிப்பு உணவுகளை அடிப்படையாக கொண்டு பெயர்கள் வைக்கப்படுகின்றன. அன்றொஇட், ஹணிகோம்ப் 3.0 பதிப்புகளின் மூலம் டேப்களிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஸ்மார்ட் வாட்சுகள், ஸ்மார்ட் டிவி, மற்றும் கணினியிலும் பயன்படுத்தப்படுகிறது.   

மூலக்கதை