வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவையில் அதிகபட்சமாக 6 செமீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை