மமது கசாமாவினால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் தந்தைக்குச் சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
மமது கசாமாவினால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் தந்தைக்குச் சிறை!!

பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமா (Mamoudou Gassama)வினால் காப்பாற்றப்பட்ட நான்கு வயது சிறுமியின் தந்தையாருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 
 
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி, வடக்கு பரிசில் நான்கு வயது சிறுமி ஒருத்தி உயிருக்கு போராடிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்த நிலையில், விறு விறுவென கட்டிடத்தில் ஏறி அவளை மமது கசாமா காப்பாற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு குடியுரிமையும், தீயணைப்பு படையில் பணியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த நான்கு வயது சிறுமியின் தந்தை இன்று செவ்வாய்க்கிழமை மாலை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்புக்கு வரவழைக்கப்பட உள்ளார். நான்கு வயது சிறுமியை வீட்டில் தனியே விட்டு விட்டுச் சென்ற குற்றத்துக்காக அவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அறியமுடிகிறது. 
 
குறித்த சிறுமியும் அவளது சகோதரனும் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும், அவர்களது தாயார் Reunion நகரில் இருந்ததாகவும், அதேவேளை தந்தை ஒன்றரை மணிநேரங்கள் வெளியே சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய தந்தை முன்னதாகவே பல தடவைகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை