மேகாலயாவில் உள்ள விசித்திர மலைகிராமம்...... இசையை பெயராக கொண்டுள்ள மக்கள்

தினகரன்  தினகரன்
மேகாலயாவில் உள்ள விசித்திர மலைகிராமம்...... இசையை பெயராக கொண்டுள்ள மக்கள்

கொங்தங்: மேகாலயா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்காமல் இசை மூலம் அழைக்கின்றார்கள். அங்குள்ள கொங்தங் என்ற மலைக்கிராமத்தில் இந்த வினோத நிகழ்வு நடந்து வருகிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு தனித்தனி பெயர்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு இசையை உருவாக்கி அதன்படியே அவர்கள் அழைத்து வருகிறார்கள். குழந்தைகள் காடுகளுக்கு சென்றால் இந்த இசையை பயன்படுத்தி அவர்களை அழைக்க வசதியாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறை அந்த கிராமத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மயில், குயில் போன்ற பறவைகளின் இசைகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி இசையை உருவாக்கி அதன்மூலம் அவர்கள் அழைக்கின்றனர்.

மூலக்கதை