5 ஆண்டில் முதல் பட்டம் டைகர் வுட்ஸ் அசத்தல்

தினகரன்  தினகரன்
5 ஆண்டில் முதல் பட்டம் டைகர் வுட்ஸ் அசத்தல்

அட்லான்டா: அமெரிக்க கோல்ப் நட்சத்திரம் டைகர் வுட்ஸ், 5 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து  கொண்ட டைகர் வுட்ஸ் (42 வயது), உலக தரவரிசையில் 1,199வது இடத்துக்கு தள்ளப்பட்டார். எனினும் மன உறுதியுடன் மீண்டும் களமிறங்கி விளையாடி வந்த அவர் நடப்பு சீசனின் கடைசி போட்டியாக அட்லான்டாவில்  நடைபெற்ற சாம்பியன்ஷிப்பின் தொடக்கத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார். பின்னர் அபாரமாக விளையாடிய அவர் 2 ஷாட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். கடந்த 5 ஆண்டில் அவர் பெற்ற முதல் சாம்பியன் பட்டமாக இது அமைந்தது. மொத்தம் 80 பிஜிஏ டூர் சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ள டைகர், சக அமெரிக்க வீரர் சாம் ஸ்னீடுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார்.  இங்கிலாந்தின் ஜஸ்டின் ரோஸ் அட்லான்டாவில் 4வது இடம் பிடித்தாலும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மூலக்கதை