ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை - 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை  3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது

ஆந்திரா: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் நடத்திவரும் பாதயாத்திரை 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்துள்ளது.பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் இருந்து அவர் யாத்திரையைத் தொடங்கினார். 11 மாவட்டங்களில் 116 தொகுதிகளைக் கடந்து வந்துள்ள ஜெகனின் பாதயாத்திரை இன்று விசாகப்பட்டினத்தை வந்தடைகிறது.  நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த பாதயாத்திரையை அவர் நடத்தி வருகிறார். சந்திரபாபு ஆட்சியில் ஆந்திராவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார்.

மூலக்கதை