வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் முதல் முறையாக வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வடகொரியா உருவான பின் வடகொரியா, அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா-வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.பொருளாதார தடை, அணுஆயுத குறைப்பு குறித்த ஒப்பந்தமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை