எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

‘ஜிம் – 2’ எனும் இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டு பணி­களில் ஈடு­பட, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு, 4 கோடி ரூபாய் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில், 2019, ஜன­வரி 23, 24ம் தேதி­களில், இரண்­டா­வது சர்­வ­ தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெற உள்­ளது. இதற்­கான பல்­வேறு பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­கின்றன. ஆனால், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­வது தொடர்­பான பணி­களில் ஈடு­பட, சம்­பந்­தப்­பட்ட துறைக்கு, உரிய நிதி ஒதுக்­கப்­ப­டா­மல் இருந்­தது. இந்­நி­லை­யில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: முதல் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், துறை அதி­கா­ரி­கள் முயற்சி எடுத்து, 16 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில், 10 ஆயி­ரத்து, 532 ஒப்­பந்­தங்­கள் பெற்று தந்­த­னர்.இரண்­டா­வது மாநாட்­டில், சிறு, குறு, நடுத்த நிறு­வ­னங்­கள், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு பெற வேண்­டும் என, அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. துறை ரீதி­யான பணி­களை மேற்­கொள்ள, மாநாட்டு நிதி­யில், எம்.எஸ்.எம்.இ.,க்கு, 4 கோடி ரூபாய் தற்­போது ஒதுக்­கப்­பட்­டு உள்­ளது. இந்த நிதி­யில், மாவட்­டத்­துக்கு தலா, 2 லட்­சம் ரூபாய் வீதம் வழங்­கப்­பட்­டு உள்­ளது. இவ்­வாறு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை