அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது: அமைச்சர் குரேஷி

தினமலர்  தினமலர்
அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது: அமைச்சர் குரேஷி

வாஷிங்டன் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள அவர், வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேச்சு நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முதலில் ஏற்ற இந்தியா, பின்னர் அதனை ஒரே நாளில் ரத்து செய்தது ஆச்சரியமாக உள்ளது.

இந்த மாதத்தில்தான் பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், ஜூலை மாதம் நடந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கலாம். ஆனால், நாங்கள் அதற்கான வாய்ப்புகளை முழுவதுமாக மறுக்க மாட்டோம். அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது.

இந்தியா, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வது காஷ்மீரில் நல்ல சூழ்நிலை உருவாக்காது. சந்திப்புகளும், பேச்சுவார்த்தைகளும்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ராஜ்யரீதியில் முறைப்படிதான் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் தரப்பு கடிதம் எழுதியது. ஆனால், இந்தியத் தரப்பு அணுகுமுறை சரியாக இல்லை.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சும், அவர் பேசிய முறையும் ஒரு வெளியுறவு அமைச்சருக்குரியதாக இல்லை. போர் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசியது இல்லை. அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லுறவு, மக்களின் மேம்பாடு ஆகியவற்றையே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியத் தரப்பில் இருந்துதான் இதற்கு மறுப்பு எழுகிறது. யாராவது எங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் அதனை நாங்கள் எதிரப்போம்.

நாங்கள் எப்போதும் யாரிடமும் மோசமான போக்கை முன்னெடுக்க மாட்டோம்', 'காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பாகிஸ்தானின் குருத்வாராவில் வழிபாடு நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் பாகிஸ்தான் செய்து கொடுத்தது, என்றார்.

மூலக்கதை