பூமியை போன்று 2 உலகங்கள் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
பூமியை போன்று 2 உலகங்கள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் பூமியைப்போன்ற கோள் இருப்பதாக நாசா செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.

நாசாவால் டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் என்ற செயற்கைகோள் 2 மாதங்களுக்கு முன்பு விண்ணிற்கு அனுப்பப்பட்டது. 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நட்சத்திரத்திற்கு அருகே வேறுஉலகம் இருப்பதை அந்த செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. பூமியை இது சற்று பெரியது என கூறப்பட்டுள்ளது. இது ஒரு உலகம்.

பி மென் சி எனப்படும் நட்சத்திரத்தை சுற்றிவரும் மற்றொரு உலகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது உலகம் ஆகும். இதிலுள்ள கெப்லர் தொலைநோக்கி இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தக் கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மூலக்கதை