'சவுதி ‛டிவி'யில் பெண் அறிவிப்பாளர்கள்

தினமலர்  தினமலர்
சவுதி ‛டிவியில் பெண் அறிவிப்பாளர்கள்

ரியாத் : சவுதி அரேபியா 'டிவி'யில் இரவு நேர பெண் அறிவிப்பாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் சமீபகாலமாக பெண்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்துவரும் நடவடிக்கைகளால் கார் ஓட்ட அனுமதி, விளையாட்டு மைதானங்களுக்கு அனுமதி என பெண்களுக்கு படிப்படியாக உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது 'டிவி' செய்தி வாசிப்பதற்கும் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவுதியின் 'கலீஸ் டைம்ஸ்' சேனலின் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சவுதியின் விமானங்களில் துணை விமானிகளாக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை