எங்கள் நாட்டில் தலையிட ஐ.நா.வுக்கு உரிமையில்லை; மியான்மர் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
எங்கள் நாட்டில் தலையிட ஐ.நா.வுக்கு உரிமையில்லை; மியான்மர் திட்டவட்டம்

யாங்கூன் : எங்கள் நாட்டின் பிரச்னைகளில் தலையிட ஐ.நா.வுக்கு எந்த உரிமையும் இல்லை என மியான்மர் அறிவித்துள்ளது.

சொந்த நாட்டு குடிமக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரச்னையில் மியான்மர் மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அங்கிருந்து ரோஹிங்கியாக்கள் அகதிகளாக வெளியேறி அண்டைநாடுகளான வங்கதேசத்தில் வசிக்கின்றனர். அவர்களை தாய்நாட்டிற்கு அனுப்புவது குறித்து மியான்மருடன் வங்க தேசம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மியான்மர் ராணுவம் இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஐ.நா. குற்றம்சாட்டியது. இதை மியான்மர் அரசு மறுத்துள்ளது. இருப்பினும் செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. புலனாய்வு அமைப்பினரை சம்பவம் நடந்த பகுதிக்கோ, ரோஹிங்கியாக்களிடம் பேசவோ அனுமதிக்க மறுத்து வருகிறது. எனவே ராணுவத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என ஐ.நா. கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இதற்கு மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லைங் பதிலளித்துள்ளார். ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ பிற நாடுகளுக்கோ, அமைப்புகளுக்கோ உரிமை கிடையாது. இது ஐ.நா.வுக்கும் பொருந்தும், என கூறியுள்ளார். இதன் மூலம் ரோஹிங்கியா பிரச்னைக்கு தீர்வு காண மியான்மர் விரும்பவில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

மூலக்கதை