மக்களை குழப்பிய புகைப்படம்!

PARIS TAMIL  PARIS TAMIL
மக்களை குழப்பிய புகைப்படம்!

ரஷ்யாவில் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திர உயிரினத்தின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலகில் பல உயிரினங்கள் தோன்றி அதற்கான ஆயுட்காலம் முடிந்த பிறகு இறந்து போவது உலக நீதியாக உள்ளது. அந்த வகையில் சுமார் 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கண்டறியப்பட்டுள்ளது. 
 
ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை கடல் பகுதியில் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு டிக்கின்சோனியா என அழைக்கப்பட்டுகிறது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இந்த டிக்கின்சோனியா உயிரினத்தின் தடங்கள் ஏற்கனவே இருந்தாலும், ரஷ்யாவில் இருப்பது பழமையானதாக கருதப்படுகிறது.
 
இது கால்தடம் என கூறப்பட்டாலும், இது அந்த உயிரினத்தின் மொத்த உடல்தடம் ஆகும். இது 58 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தது என கணிக்கப்பட்டுள்ளதால், ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியது. எனினும் இந்த புகைப்படம் என கண்டுபிடிப்பதற்கு மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.
 

மூலக்கதை