இப்ராகிம் முகமது மாலத்தீவு அதிபர் ஆகிறார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இப்ராகிம் முகமது மாலத்தீவு அதிபர் ஆகிறார்!

இப்ராகிம் முகமது மாலத்தீவின் அதிபர் ஆகிறார்.


தெற்காசிய நாடான, மாலத்தீவில்,  அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. 


ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 சதவீத ஓட்டுகள் பதிவாகின.


ஓட்டுப்பதிவு நிறைவடைந்தபின் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மூலக்கதை