ஆஸ்திரேலிய கடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஆஸ்திரேலிய கடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரம்!

ஆஸ்திரேலிய கடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

படகில் உலகை சுற்றி வரும், 'கோல்டன் குளோப்' போட்டி, கடந்த ஜூலை, 1-ந் தேதி துவங்கியது. இந்த போட்டியில் பங்கேற்போர், ஒற்றை ஆளாக, 48 ஆயிரம் கி.மீ., தூரத்தை கடந்து வர வேண்டும்.

இந்தியாவின் சார்பில், 39 வயதான கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமி,  பங்கேற்றார். நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'துரியா' எனும் படகில் பயணம் செய்த அவர், 84 நாட்களில், போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார். 

ஆஸ்திரேலியா அருகே சென்ற போது, 14 மீ., உயர ராட்சத அலையில் சிக்கி, படகு சேதமடைந்தது. இதில், அபிலாஷ் டோமியின் முதுகில் படுகாயம் ஏற்பட்டது. அவரது உடலை அசைக்கக் கூட முடியாத நிலைக்கு ஆளானார்.  இதையடுத்து, அவரை மீட்க, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை போர்கப்பல்கள் விரைந்து உள்ளதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கடற்படை போர் கப்பல்கள் உதவியுடன், கமாண்டர் அபிலாஷ் டோமியை மீட்க, திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை