கார் விபத்தில் கன்னட நடிகர்கள் தேவராஜ்-தர்ஷன் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கார் விபத்தில் கன்னட நடிகர்கள் தேவராஜ்தர்ஷன் படுகாயம்

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் கன்னட நடிகர்கள் தேவராஜ், தர்ஷன் பலத்த காயம் அடைந்தனர்.
பிள்ளைக்காக, மலைக்கோட்டை, வில்லு ஆகிய தமிழ் மற்றும் ஏராளமான கன்னட படங்களில் நடித்திருப்பவர் தேவராஜ். மற்றொரு கன்னட நடிகர் தர்ஷன்.

இவர்கள் பெங்களூருவில் இருந்து மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலையில் டிரைவர் பிரஜ்வாலின் கட்டுப்பாட்டை இழந்த கார் மைசூரு அருகில் உள்ள இங்கல் என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

இதில் நடிகர் தர்ஷன் வலது முழங்கை எலும்பு முறிந்தது.

 நடிகர் தேவராஜிக்கு கை விரல்கள் முறிந்துள்ளது. காயமடைந்த இருவரையும் உடனடியாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உடனடியாக டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தேவராஜ், தர்ஷன் இருவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருவர் உயிருக்கும் ஆபத்து இல்லை என டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனை முன்பாக நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரண்டுள்ளனர். அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வி. வி. புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

.

மூலக்கதை