Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!

PARIS TAMIL  PARIS TAMIL
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Nîmes இன் Pissevin பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 23 ஆம் திகதி, குறித்த பகுதியில் உள்ள rue Vivaldi வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 12 ஆவது தளத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தியே கீழே விழுந்துள்ளாள்.
 
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி விழுந்ததுக்குரிய காரணங்களை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். உடனடியா SAMU மருத்துவர்களால் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்.
 
ஆனால், இன்று திங்கட்கிழமை காலை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாள்.

மூலக்கதை