கோலியின் இடத்தை கைப்பற்ற துடிக்கும் ரோஹித்: கேப்டன் ரேசில் ஜெயிப்பாரா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோலியின் இடத்தை கைப்பற்ற துடிக்கும் ரோஹித்: கேப்டன் ரேசில் ஜெயிப்பாரா?

துபாய்: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்ததால், விராட் கோலி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இங்கிலாந்தில் இந்திய அணியின் சொதப்பல்களுக்கு கோலி, ரவி சாஸ்திரி கூட்டணியின் தவறான அணுகுமுறை தான் காரணம் என பல தரப்பில் இருந்தும் கூறப்படுகிறது.

இனி ரோஹித்தை கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கலாமே என்ற பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது.   ரோஹித் டெஸ்ட் அணிகளில் தேர்வு செய்யாமல்  இருப்பதாலும் இந்தப் போக்கு நிலவி வருகிறது. ரோஹித் சர்மா போட்டிக்கு முன்பே திட்டங்களை விட, போட்டி நடந்து வரும் போது துரிதமாக முடிவெடுப்பதில் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக  வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட ஜடேஜா நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பிய நிலையில், அவரை நல்ல நிலைமையில் ஆட வைத்தார்.

 அதே போல, பேட்ஸ்மேன்கள் வரிசையை மாற்றவும் யோசிப்பதில்லை.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், தோனியை நான்காம் இடத்தில் ஆட வைத்தார் ரோஹித். இது தோனியின் முடிவல்ல.

ரோஹித் தான் தோனி வேண்டும் என  அவரை நான்காவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வர வேண்டும் என அழைத்தார். தோனியிடம் யோசனை கேட்டு தான் பல முடிவுகளை எடுக்கிறார் ரோஹித்.

அதை மிக வெளிப்படையாகவே செய்து வருகிறார்.

இது போன்று ஒரு அணிக்கு தேவையான முடிவுகளை தைரியமாக சரியான நேரத்தில் எடுப்பதால் கோலிக்கு பதில் ரோஹித் கேப்டனாக நீடிக்கலாம் என பலமான பேச்சு அடிபடுகிறது.

.

மூலக்கதை