சுழற்றி அடிக்கும் சூறாவளி புயலில் சிக்கி உயிருக்கு போராடும் இந்திய வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுழற்றி அடிக்கும் சூறாவளி புயலில் சிக்கி உயிருக்கு போராடும் இந்திய வீரர்

சிட்னி: கோல்டன் குளோப் எனப்படும் பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் பாரம்பரிய போட்டியில் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி என்பவர்  கலந்துகொண்டார்.   ஜூலை 1ம் தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் 84 நாள்களில் சுமார் 10 ஆயிரம் மைல் கடந்த இவர் போட்டியில் 3வது இடத்தில் இருந்து வந்தார்.   30 ஆயிரம் மைல் தூரம்  கடலில் பயணிக்கும் இந்தப் போட்டியில் 10 ஆயிரம் மைல்களுக்கு மேல் பயணம் செய்து முடித்த நிலையில்  அபிலாஷ் பெரும் விபத்தில் சிக்கிக் கொண்டார். போட்டியாளர்களுடனான அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட எஸ். வி துரயா என்னும் படகில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில்  சென்று கொண்டிருக்கும்போது, மோசமான வானிலையால் ஏற்பட்ட   கனமழை, புயல்  காரணமாக     அவரது படகு விபத்தில் சிக்கியது.

 130 கி. மீ வேகத்தில் கடும் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக அவரது படகு சின்னாபின்னமானதோடு அபிலாஷ் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்.
 விபத்தில் சிக்கியவரை மீட்க உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.

கடுமையான மழை  மற்றும் புயலால் ஹெலிகாப்டரை  மேற்கொண்டு இயக்க முடியாமல் தடுமாறி திரும்பி வந்து விட்டனர். ஆஸ்திரேலியாவின் பெர்த் கடற்கரையில் இருந்து 1900 நாட்டிக்கல் மைல் பகுதியில் தற்போது இவர் சிக்கிக் கொண்டுள்ளதால் அவரை மீட்க இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ. என். எஸ் சாட்புரா மற்றும் ஐ. என். எஸ் ஜோதி ஆகிய கப்பல்களில்  மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

இவர் ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்  கலந்துகொண்டார்.

தற்போது இரண்டாவது முறையாக அவர் கோல்டன் குளோப் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார்.

.

மூலக்கதை