ஆராய்ச்சி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி ஜப்பான் ஜாக்ஸா நிறுவனம் சாதனை

தினகரன்  தினகரன்
ஆராய்ச்சி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி ஜப்பான் ஜாக்ஸா நிறுவனம் சாதனை

டோக்கியோ: ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு பூமிக்கு அருகே உள்ள ர்யுகு என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக  ஹயபுஸா 2 என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II எனப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா தெரிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.இதன் விண்கல் மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் பெற்றுள்ளது. விண்கல்லில் தரையிரங்கிய ரோவர்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. மேலும் இந்த விண்கல்லானது சுமார் 1 கி.மீட்டர் அகலத்தில், தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் நிறைந்துள்ளது. வைர வடிவத்தில் காட்சியளிக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு இதை போன்று ஜாக்ஸா ஹயபுஸா என்ற விண்கலத்தை விண்ணில் அணுப்பி அந்த முயற்சி தொல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலக்கதை