கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாது: ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க ஓப்பெக் கூட்டமைப்பு நாடுகள் மறுப்பு

தினகரன்  தினகரன்
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாது: ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க ஓப்பெக் கூட்டமைப்பு நாடுகள் மறுப்பு

அல்ஜீரியா: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்று ஓப்பெக் கூட்டமைப்பு நாடுகள் (OPEC-Organization of the Petroleum Exporting Countries) மறுத்து விட்டதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடுத்த வேண்டுகோளை சவூதி அரேபியா தலைமையிலான ஓப்பெக் நாடுகளும் ரஷ்யாவும் நிராகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு நிர்ணயித்த படி தற்போது தான் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை எட்டியுள்ளதாக ஓப்பெக் கூட்டமைப்பு நாடுகள் கூறியுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்காவின் தடை காரணமாக ஈரானின் பங்களிப்பு குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய இப்போதைக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தில் பார்சல் லாரிகளுக்கான வாடகை கட்டணம் இன்றுமுதல் 20% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல், சுங்கச்சாவடி கட்டணம் அதிகரித்து வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக பார்சல் லாரிகள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஓடும் 7000 பார்சல் லாரிகளிலும் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

மூலக்கதை