மாலத்தீவு அதிபர் தேர்தல் நேரம் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்

கொழும்பு :மாலத்தீவு அதிபர் தேர்தலின் போது ஏற்பட்ட, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஓட்டுப் பதிவு, மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.தெற்காசிய நாடான, மாலத்தீவில், அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று நடந்தது.காலையில் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார தலைமை அலுவலகத்தில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.ஓட்டுப் பதிவின் போது, ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில இடங்களில் தகராறு ஏற்பட்டது. ஐந்து மணி நேரம் வரை, மக்கள் காத்திருந்து ஓட்டளிக்கும் நிலை ஏற்பட்டது.இதனால், ஓட்டுப்பதிவு, மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இரவு, 7:00 மணி வரை ஓட்டளிக்க, வாக்காளர்கள்அனுமதிக்கப்பட்டனர்.சீனாவின் ஆதரவு பெற்ற, அப்துல்லா யாமீன், மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

மூலக்கதை