ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் 'த்ரில்' வெற்றி

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் த்ரில் வெற்றி

அபுதாபி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 'சூப்பர்-4' சுற்றுப் போட்டியில் வங்கதேச அணி 3 ரன் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், 'சூப்பர்-4' போட்டியில் வங்க சேதம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணியின் மகமதுல்லா(74), இம்ருல் கெய்ஸ்(72) அரைசதம் விளாசினர். சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மூலக்கதை