முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

'முத்தலாக்' நடைமுறை, அவசர சட்டத்தால் சட்ட விரோதமாகி விட்டது. இதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலம் தல்சேர் நகரில்,  நிலக்கரி வாயு மூலம், உரம் தயாரிப்பு தொழிற்சாலையை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திரமோடி  பேசினார். 


அவர் பேசியதாவது:
நாட்டில், ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், பல மாநிலங்கள் இணைந்துள்ளன. 

மக்கள் நலப் பணிகளுக்காக, மத்திய அரசு ஒதுக்கும், 1 ரூபாயில், 15 பைசா மட்டுமே, மக்களைச் சென்றடைகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார். ஆனால், இப்போது, பயனாளி களின் வங்கிக்கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தால், நலத்திட்டங்களை செயல்படுத்துவ தில், மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல், மத்திய அரசு, மக்களுக்காக ஒதுக்கும் ஒரு ரூபாயில், 100 பைசாவும் மக்களைச் சென்றடைகிறது.

முத்தலாக் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். வெறும் ஓட்டுக்காக மட்டுமே, சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளதாக, எதிர்க் கட்சிகள் நடிக் கின்றன. அதனால் தான், முத்தலாக் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். 
என்றாலும், தற்போது அமல்படுத்தப் பட்ட அவசர சட்டத்தால், முத்தலாக், சட்ட விரோதமாகியுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், நீதி கிடைத்துள்ளது.
மத்தியில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க, நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு பொருளாதார நீதி மட்டு மின்றி, சமூக நீதியும் வழங்க, அரசு கடமைப்பட்டு உள்ளது.

2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், முழுமையாக நிறைவேற்றப் பட்டு விடும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

மூலக்கதை