போருக்கு தோள் தட்டும் பாகிஸ்தான் ராணுவம்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநில காவலர்கள் மூவர் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காரணத்தால், இம்மாத இறுதியில் நடப்பதாக இருந்த இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்ய்ப்படுவதாக இந்தியா அறிவித்தது.டில்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராணுவத் தளபதி பிபின் ராவத், 'பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நமது நடவடிக்கை அவசியம், ஆனால், மிகக்கொடூரமாக அல்ல. இதற்கு முன் அவர்களுக்கு எதிராக பல ஆபரேஷன்களை நாம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் போன்று நாம் ஒருபொழுதும் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை' என்று தெரிவித்தார்.நாங்கள் போருக்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்தநாட்டுச் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் ராணுவம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. அதன் காரணமாக ஏராளமான உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளோம். எங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும்.நாங்கள் ஒருபோதும் பாதுகாப்பு படை வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்த போதும் எங்கள் மீதுதான் இந்திய ராணுவம் குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவப் படையினர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.நாங்கள் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே அமைதிப்பாதையில் செல்கிறோம், என்றார்.

மூலக்கதை