நிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை

தினமலர்  தினமலர்
நிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை

ரோம்: இத்தாலியில், காதல் ஜோடி, நிர்வாணமாக திருமணம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்தவர், வேலன்டின், ௩௪. இவர், ஆன்கா ஆர்சன், ௨௯, என்ற பெண்ணை, காதலித்தார். இவர்களது காதலுக்கு, இரு வீடுகளிலும் பச்சைக் கொடி காட்டினர்.
ஆனாலும், காதல் ஜோடிக்கு, 'நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும்' என்ற விபரீத
ஆசை ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து வெளியில் சொல்லவும் தயங்கினர்.எனினும், ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம், இது பற்றி தெரிவித்தனர். காதல் ஜோடியின் ஆசைக்கு, அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, இத்தாலியில் உள்ள ஒரு தீவுக்கு, நான்கு பேரும் சென்றனர். அங்கு, இருவரும், நிர்வாண கோலத்தில் திருமணம் செய்தனர். திருமணத்துக்கு வந்திருந்த அவர்களது நண்பர்கள் இருவரும், நிர்வாணமாக இருந்தனர்.
இதுகுறித்து, ஆன்கா ஆர்சன் கூறியதாவது: நாங்கள் இருவருமே, இயற்கையை ரசிப்பவர்கள்;
அதனால் தான், நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம். எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே, அழைப்பு விடுத்தோம். இது, எங்கள் ஆசைக்காக செய்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில், எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், முறைப்படி திருமணம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை