வளம் சேர்க்குமா வங்கிகள் இணைப்பு?

தினமலர்  தினமலர்
வளம் சேர்க்குமா வங்கிகள் இணைப்பு?

‘பொதுத் துறை வங்­கி­க­ளான, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்­றும் தேனா வங்கி ஆகி­யவை ஒன்­றாக இணைக்­கப்­படும்’ என, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது வர­வேற்­பை­யும், சந்­தே­கங்­க­ளை­யும் ஒருங்கே எழுப்­பி­யுள்­ளது.

இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பயன்­கள் என்­னென்ன?
இந்­தி­யா­வி­லுள்ள பொதுத்­துறை வங்­கி­களை இணைத்து, எண்­ணிக்­கை­யைக் குறைத்து, வலு­வான வங்­கி­க­ளாக மாற்ற வேண்­டும் என்ற கருத்தை, முந்­தைய காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான அர­சும், தற்­போ­தைய பார­திய ஜனதா தலை­மை­யி­லான அர­சும் தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்­றன.சென்ற முறை பாரத ஸ்டேட் வங்­கி­யோடு, அதன் ஐந்து துணை வங்­கி­கள் இணைக்­கப்­பட்­டன. தற்­போது, பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்­றும் தேனா வங்­கி­கள் இணைக்­கப்­பட உள்­ளன.

இதை எப்­படி புரிந்து கொள்­வது?
வங்­கித் துறை­யில் இன்று உள்ள முக்­கி­ய­மான பிரச்னை, வாராக்­க­டன். இதில் தலை­மூழ்கி தத்­த­ளிக்­கும் வங்­கி­கள், 11; அதில் தேனா வங்­கி­யும் ஒன்று.

வாராக்கடன் :
இவற்­றை­யெல்­லாம், ‘உட­னடி நட­வ­டிக்கை தேவைப்­படும்’ வங்­கி­கள் என, ஆர்.பி.ஐ., வகைப்­ப­டுத்தி பட்­டி­ய­லிட்­டுள்­ளது. இந்­தப் பட்­டி­ய­லில் உள்ள வங்­கி­க­ளால், ஆர்.பி.ஐ., கட்­டுப்­பாட்­டின் படி, புதிய கிளை­க­ளைத் துவங்க முடி­யாது; புதி­தாக பணி­யா­ளர்­களை நிய­மிக்க முடி­யாது; புதி­தாக கடன்­க­ளைக் கொடுக்க முடி­யாது; வர்த்­த­கத்­தைப் பெருக்­கிக் கொள்­ள­வும் முடி­யாது. ஆனால், வாராக்­க­ட­னில் இருந்து மீள வேண்­டும்.

காலைக் கட்­டிக்­கொண்டு நீச்­ச­ல­டிப்­ப­தற்கு ஒப்­பா­னது இது. வேறு வழி­யில்­லா­மல் இவ்­வங்­கி­களை, அரசு தான் மீட்­டாக வேண்­டும். அத­னால் தான், பாங்க் ஆப் பரோடா மற்­றும் விஜயா வங்கி என்ற இரண்டு வலி­மை­யான குதி­ரை­களை, தேனா வங்கி என்ற சோனி குதி­ரை­யோடு இணைக்­க­வி­ருக்­கின்­ற­னர். இவை மூன்­றும் சேர்ந்து, இந்­தி­யா­வின் மூன்­றா­வது வலி­மை­யான வங்­கியை உரு­வாக்­கும் என்­பதே எதிர்­பார்ப்பு.

ஏற்­க­னவே வாராக்­க­ட­னில் தத்­த­ளிக்­கும், ஐ.டி.பி.ஐ., வங்­கியை, எல்.ஐ.சி., கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம், அந்த வங்­கி­யைக் காப்­பாற்ற, மத்­திய அரசு முயற்சி செய்­தது; தற்­போது தேனா வங்கி.

சவால்கள் :
இணைப்­புக்­கான கார­ணங்­களில் ஒன்று, பொதுத்­துறை வங்­கி­க­ளுக்­கான தலை­மை­க­ளைத் தேடி நிய­மிப்­ப­தில் உள்ள சிக்­கல். இந்­தி­யா­வி­லுள்ள, 21 பொதுத் துறை வங்­கி­கள் பல­வற்­றில் தலை­வர்­களோ, நிர்­வாக இயக்­கு­னர்­களோ பல மாதங்­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அந்­தந்த வங்­கி­களில், அடுத்த தலை­முறை தலை­வர்­களை உரு­வாக்­கும் ஆரோக்­கி­ய­மான மனி­த­வள நெறி­முறை, பின்­பற்­றப்­ப­ட­வில்லை. இத­னால், வங்­கி­களை இணைத்­து­விட்­டால், தலை­வர் பற்­றாக்­கு­றை­யைத் தீர்த்­து­வி­ட­லாம் என்ற எண்­ணம் மத்­திய அர­சுக்கு இருக்­க­லாம் என்­பது, பொரு­ளா­தார நிபு­ணர்­கள் கருத்து.

இந்த மூன்று வங்­கி­க­ளை­யும் உட­ன­டி­யாக இணைப்­ப­தற்கு இன்­னொரு அடிப்­படை, இவை பயன்­ப­டுத்­தும் வங்­கித் துறை மென்­பொ­ருள். இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் பின்­னக்­கல், 10 என்ற தொழில்­நுட்­பத்தை இவை மூன்­றுமே பயன்­ப­டுத்­து­வ­தால், இவற்­றின் வங்­கிச் செயல்­பா­டு­களை ஒருங்­கி­ணைப்­ப­தில் சிக்­கல் இருக்­காது என, கரு­தப்­ப­டு­கிறது. வங்­கி­களை இணைப்­ப­தன் மூலம், அவற்­றி­டம் இருக்­கக்­கூ­டிய வசதி, வாய்ப்­பு­கள் பங்­கிட்­டுக் கொள்­ளப்­படும்; செல­வு­கள் குறை­யும்; சேவை­கள் மேம்­படும் என, மத்­திய அரசு கரு­து­கிறது. ஆனால், இணைப்­பு­க­ளின் மூலம், எதிர்­பார்க்­கப்­பட்ட பலன்­கள் கிடைத்­துள்­ள­னவா... என்­பது மிகப்­பெ­ரும் கேள்­விக்­குறி.

உல­கெங்­கும் வங்கி இணைப்­பு­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட பலன்­களில், 30 சத­வீ­தமே கிடைத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கிறது ஓர் ஆய்வு. மாறாக, பல பிரச்­னை­கள் தான் தலை­துா­க்­கி­யுள்­ளன. முக்­கி­ய­மாக, ஒரே பகு­தி­யில் ஒன்­றுக்கு மேற்­பட்ட வங்­கி­க­ளின் கிளை­கள் இருக்­க­லாம். உப­ரி­யாக இருக்­கக்­கூ­டிய கிளை­களை மூட வேண்­டும். பணி­யா­ளர்­களை வேறு கிளை­க­ளுக்கு மாற்ற வேண்­டும் அல்­லது வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும். பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி இணைப்­பில், அடுத்த சில ஆண்­டு­களில் பல பணி­யா­ளர்­கள் ஓய்­வு­ பெ­று­வர் என்­ப­தால், அவர்­களை நீக்க வேண்­டிய தேவை எழாது என்று சொல்­லப்­ப­டு­கிறது.

மேலா­ளர்­கள், துணைப் பொது மேலா­ளர்­கள், பொது மேலா­ளர்­கள் என, ஒவ்­வொரு வங்­கி­யும் தனித்­த­னியே ஒரு அதி­கார அடுக்கை உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கும். வங்­கி­கள் இணைக்­கப்­ப­டும்­போது, எந்த மேலா­ளர், எந்த உய­ர­தி­கா­ரிக்­குப் பதில் சொல்ல வேண்­டும், யாரு­டைய உத்­த­ர­வுக்­குக் கட்­டுப்­பட வேண்­டும் என்­ப­தை­யெல்­லாம் நிர்­ண­யிப்­பது, அடுத்த ஒரு பெரிய சவால். மேலும், ஒவ்­வொரு வங்­கிக்­கும் ஒவ்­வொரு வேலை கலா­சா­ரம் இருக்­கும். அவற்றை ஒருங்­கி­ணைப்­பது அடுத்த ஒரு சவால்.

லாபம் ஈட்டுமா?
வங்­கி­களை இணைப்­ப­தால், அவை லாப­மீட்­டத் துவங்­கி­வி­டுமா... என்­பது தான் முக்­கி­ய­மான கேள்வி. வங்­கி­க­ளின் முக்­கி­ய­மான தொழில் கடன் கொடுப்­பது. தகுதி பார்த்து, தரம் உணர்ந்து, திரும்பி வரக்­கூ­டிய கடன்­க­ளைக் கொடுப்­பது மட்­டுமே வங்­கி­களை காப்­பாற்­றும். வங்­கி­களை இணைப்­ப­தால், கட­னின் தரத்­தில் எந்­தப் பெரும் மாறு­த­லும் ஏற்­ப­டப் போவ­தில்லை. கடன் வழங்­கும் நடை­மு­றை­களில் முற்­றி­லும் வித்­தி­யா­ச­மான அணு­கு­முறை ஏற்­பட்­டால் தான், நம்­பிக்கை ஏற்­படும். பெரிய வங்­கி­க­ளாக இருந்­தால், அவற்­றால் எத்­த­கைய நஷ்­டங்­க­ளை­யும் தாங்­கிக்­கொள்ள இய­லும் என்­பது, மற்­றொரு தவ­றான புரி­தல். சின்ன வங்­கி­கள் நஷ்­ட­ம­டைந்­தால், அவற்றை ஏதே­னும் ஒரு பெரிய வங்­கி­யோடு இணைத்­துக் காப்­பாற்­றி­விட முடி­யும்.

வங்கி நஷ்டமடைந்தால்?
இந்­தி­யா­வுக்கு எதற்கு இத்­தனை பொதுத்­துறை வங்­கி­கள் என்ற கேள்­வியே தவறு. அமெ­ரிக்­கா­வில், 7,000 வங்­கி­களும்; ஜெர்­ம­னி­யில், 1,800 வங்­கி­களும்; ஸ்பெ­யி­னில், 300 வங்­கி­களும் உள்­ளன. ஒவ்­வொரு நாட்­டுக்­கும் இத்­தனை வங்­கி­கள் தான் இருக்க வேண்­டும் என்ற எந்­தக் கட்­டுப்­பா­டும் கிடை­யாது. சின்ன வங்­கி­க­ளாக இருந்­தால், அவை இயங்­கும் பகு­தி­யை­யும், அங்­குள்­ளோ­ரின் தேவை­க­ளை­யும் நன்கு புரிந்­து­கொள்ள முடி­யும்; அதற்­கேற்ப சேவை­களை வழங்கி, லாப­மீட்ட முடி­யும். பெரிய வங்­கி­க­ளாக மாறி­விட்­டால், சட்ட திட்­டங்­களும், நெறி­மு­றை­களும், கெடு­பி­டி­களும் கோலோச்­சத் துவங்­கி­வி­டும். வங்கி பக்­கமே பலர் வர முடி­யாத அள­வுக்கு அதன் பிர­மாண்­டமே பய­மு­றுத்தி துரத்­தி­வி­டும்.

வங்­கி­யின் தரம் என்­பது, அவற்றை இணைப்­ப­தில் இல்லை; செம்­மை­யாக நடத்­து­வ­தி­லும், மேம்­ப­டுத்­து­வ­தி­லுமே இருக்­கிறது. லட்­சோப லட்சம் மக்­க­ளின் வியர்­வை­யி­லும், கண்­ணீ­ரி­லும் உரு­வான சேமிப்­பு­களை நிர்­வ­கிக்­கி­றோம் என்ற பொறுப்­பு­ணர்வு அவ­சி­யம். இப்­போ­தைக்கு பேலன்ஸ் ஷீட்­டு­கள் தான் இணைந்­துள்­ளன; அதி­லுள்ள லாப அளவு உயர்ந்­தால் தான், இந்த இணைப்­பு­க­ளுக்கு நியா­யம் கிடைக்­கும்.

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

மூலக்கதை