‘யூலிப்’ திட்­டங்­கள் பற்றி அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்

தினமலர்  தினமலர்
‘யூலிப்’ திட்­டங்­கள் பற்றி அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்

‘யூலிப்’ என, குறிப்­பி­டப்­படும் ’யூனிட் லிங்க்டு இன்­ஷூ­ரன்ஸ் பிளான்’ வரி­சே­மிப்­புக்­கான பிர­ப­ல­மான முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக இருக்­கிறது. பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு, முத­லீட்டு அம்­சத்­து­டன் கூடிய காப்­பீடு பாது­காப்பை இவை அளிக்­கின்­றன. இந்த வகை திட்­டம் தொடர்­பாக, அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்:

நிதி மாற்­றம் :
யூலிப் திட்­டங்­கள், இன்­கம் பண்ட் (கடன்­சார் முதலீடு, மித­மான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சம­பங்கு மற்றும் கடன் சார் முத­லீடு, மித­மா­னது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதி­களில் முத­லீடு செய்ய கிடைக்­கின்­றன. இவற்­றில் ஒரு வகை நிதியை தேர்வு செய்­தா­லும், சந்தை போக்­கிற்கு ஏற்ப, திட்­டத்தை இடையே மாற்­றிக்­கொள்­ள­லாம்.

முதிர்வு காலம் :
யூலிப்­கள் மூலம் கிடைக்­கும் முதிர்வு தொகை­யின் பலன், சந்தை போக்­கிற்கு ஏற்ப அமை­யும். எனவே, முதிர்வு காலத்தை மொத்த முதிர்வு தொகை அல்­லது தவ­ணை­யாக முதிர்வை தள்ளி வைத்து, எப்­போது வேண்­டு­மா­னா­லும் விலக்கி கொள்ள வாய்ப்பு அளிக்­கும் திட்­டத்தை,தேர்வு செய்ய வேண்­டும். -

அதிக பிரீ­மி­யம் :
யூலிப் திட்­டங்­களில் சம் அஷ்­யுர்டு தொகையை எப்­படி பெற வேண்­டும் என்­பதை தீர்­மா­னிக்­க­லாம். ஆண்டு பிரீமி­யமை விட ௫ மடங்கு, ௭ மடங்கு அல்­லது ௧௦ மடங்­கு எனும் வாய்ப்­பு­கள் உள்­ளன. இவை பாலி­சிக்கு ஏற்ப அமை­யும். பாலி­சி­தா­ரர் இறக்­கும் சூழ­லில் கிடைக்­கும் தொகை அதி­க­மாக இருக்க, அதிக சம் அஷ்­யுர்டை தேர்வு செய்ய வேண்­டும்.

வரிச்­ச­லுகை :
யூலிப் பாலி­சி­கள் வரு­மான வரிச்­சட்­டம், 80 சி பிரி­வின் கீழ் வரி விலக்­கிற்கு உரி­யவை. முதிர்வு மற்­றும் டெத் கிளைம் வரி விலக்கு உள்­ளவை. ஆனால், வரிச்­ச­லுகை பெற சம் அஷ்­யூர்டு தொகை ஆண்டு பிரீமி­யமை விட 10 மடங்­காக இருக்க வேண்­டும். அதற்கு குறை­வாக தேர்வு செய்­யக்­கூ­டாது.

கட்­ட­ணங்­கள் :
யூலிப் திட்­டங்­களை நிர்­வ­கிக்க, பாலிசி நிர்­வாக கட்­ட­ணம் உள்­ளிட்ட, பல வகை கட்­ட­ணங்­கள் உண்டு. இந்த கட்­ட­ணங்­கள் பாலி­சி­தா­ர­ரின் யூனிட்­களில் கழித்து கொள்­வ­தன் மூலம் பெறப்­ப­டு­கின்­றன. எனவே, பாலிசி திட்­டம் தொடர்­பான கட்­டண விகி­தங்­கள் எவை என்­பதை, நன்­றாக அறிந்­தி­ருக்க வேண்­டும்.

மூலக்கதை