ஓய்வு கால சேமிப்­பில் இந்­தி­யர்­க­ள் எப்படி?

தினமலர்  தினமலர்
ஓய்வு கால சேமிப்­பில் இந்­தி­யர்­க­ள் எப்படி?

இந்­தி­யா­வில் உள்ள பணி­பு­ரி­யும் பிரி­வி­னர் மத்­தி­யில், 3ல் ஒரு­வர் தான் ஓய்வு காலத்­திற்கு என, திட்ட­மிட்டு சேமித்து வரு­வது தெரிய வந்­துள்­ளது.

எச்.எஸ்.பி.சி., நிறு­வ­னம், ‘ஓய்வு காலத்­தின் எதிர்­கா­லம்’ எனும் பெய­ரில், இந்­தியா உள்­ளிட்ட, 16 சர்­வ­தேச நாடு­களில் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது. இந்­தி­யா­வில், இந்த ஆய்­வில், 1,054 பேர் பங்­கேற்­ற­னர். இந்­தி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் தங்­கள் குடும்­பத்­தி­னர் ஆத­ரவு கிடைக்­கும் என, நம்­பு­கின்­ற­னர். ஓய்வு காலத்­தில், 68 சத­வீ­தம் பேர் பிள்­ளை­கள் ஆத­ரவு கிடைக்­கும் என, நம்­பு­கின்­ற­னர்.

உலக அள­வில், பணி­யில் இருக்­கும் பிரி­வி­ன­ரில், 50 சத­வீ­தத்­தி­னர் எதிர்­கால வாழ்க்­கைக்கு திட்­ட­மி­டு­வதை விட, தற்­போது நன்­றாக வாழ்க்­கையை அனு­ப­விப்­ப­தில் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர் என்­ப­தும் இந்த ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

மூலக்கதை