சேதமான நோட்டை மாற்றும் வழி

தினமலர்  தினமலர்
சேதமான நோட்டை மாற்றும் வழி

சேத­ம­டைந்த அல்­லது கிழிந்த ரூபாய் நோட்டை வங்கி கிளை­கள், ரிசர்வ வங்கி அலு­வ­ல­கத்தில் மாற்­றிக்­கொள்­ள­லாம். இதற்­கான நடை­முறை: ரிசர்வ் வங்கி விதி­மு­றை­கள் படி, பயன்­பாட்­டி­னால் சேதம்­அ­டைந்த நோட்­டு­கள், கிழிந்த நோட்­டு­கள் மற்­றும் மாற்றி ஒட்டப்­பட்ட நோட்­டு­கள் ஆகிய மூன்று வகை ரூபாய் நோட்­டு­களை மாற்றி, அதற்கு பதி­லாக உரிய பணம் பெற்றுக்­கொள்­ள­லாம்.

ரூபாய் நோட்டு மீது வாச­கங்­கள் எழு­தப்­பட்­டு இ­ருந்­தா­லும் அவை செல்­லும். இத்­த­கைய நோட்­டு­க­ளை­யும் மாற்­றிக்­கொள்­ள­லாம். ஆனால், அர­சி­யல் வாச­கம் எழு­தப்­பட்ட நோட்­டு­கள், செல்­லா­த­வை­யாக கரு­தப்­படும். மிக­வும் மோச­மாக சேத­ம­டைந்த மற்­றும் எரிந்த நிலை­யில் இருக்­கும் நோட்­டு­களை மாற்ற, வங்­கி­கள் மறுக்­க­லாம்.

சேத­ம­டைந்த ரூபாய் நோட்டை மாற்றி பணம் பெற்­றுக்­கொள்ள­லாம் என்­றா­லும், எல்லா நேரங்­க­ளி­லும் முழுத்­தொகை கிடைக்க வாய்ப்­பில்லை. கிழிந்த நோட்­டு­களை பொறுத்­த­வரை, பிரி­யா­மல் இருக்­கும் பெரிய துண்­டின் பரப்பு, மொத்த சேத­மா­காத பரப்­பின், 80 சத­வீதத்­திற்கு மேல் இருந்­தால் தான் முழுத்­தொகை கிடைக்­கும். பெரி­யத்­துண்டு, 40 சத­வீதத்­திற்கு மேல், ஆனால், 80 சத­வீதத்­திற்கு குறை­வாக இருந்­தால், 50 சத­வீத மதிப்பு கிடைக்­கும். பெரிய துண்டு இதற்­கும் கீழ் இருந்­தால், பணம் கிடைக்காது.

இரு வேறு நோட்­டு­கள் ஒன்றாக ஒட்­டப்­பட்ட நிலை­யில், பெரிய மதிப்­பி­லான நோட்டு, கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­படும். ஒட்­டப்­பட்­டவை, 50 ரூபாய்க்கு மேல் இருந்­தால், அவை தனித்­த­னியே கரு­தப்­படும். அவற்­றின் தனி அள­விற்கு ஏற்ப, பணம் அளிக்­கப்­படும். சேத­ம­டைந்த நோட்­டு­களை சேமிப்பு கணக்­கி­லும் செலுத்­த­லாம். இவை பின்­னர் புழக்­கத்­திற்கு வராது.

மூலக்கதை