சூடு பிடிக்கும் டில்லி அரசியல் களம்!

தினமலர்  தினமலர்
சூடு பிடிக்கும் டில்லி அரசியல் களம்!

புதுடில்லி : பிரான்சிடம் இருந்து, இந்திய விமானப் படைக்கு, 36 ரபேல் விமானங்களை வாங்க, 2016ல், ஒப்பந்தம் கையெழுத்தானது; இதன் மதிப்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய்.வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு எதிராக பெரியளவில் புகார்கள் எதுவும் இல்லாததால், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென தெரியாமல் சிக்கித் தவித்தன.

இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக கூறிய சர்ச்சை கருத்து, எதிர்க் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் அஸ்திரமாக உருவெடுத்துள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராக, காங்., தலைவர் ராகுல் ஆவேசமாக குரல் கொடுத்து வருகிறார்.

'பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் கருத்து, மத்திய அரசில் ஊழல் நடந்ததை நிரூபித்துள்ளது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பொய் சொல்கிறாரா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்' என, ராகுல் வலியுறுத்தி வருகிறார். ரபேல் விவகாரத்தால், டில்லி அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.

மூலக்கதை