தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தல் முடிவை எண்ணி டிஆர்எஸ் வருத்தம்: காங். தலைவர் பேட்டி

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தல் முடிவை எண்ணி டிஆர்எஸ் வருத்தம்: காங். தலைவர் பேட்டி

ஐதராபாத்: ‘‘தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தல் நடத்தும் முடிவை எடுத்ததற்காக ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வருந்துகிறது’’ என காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறி உள்ளார்.மக்களவை தேர்தலுடன் தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில், ஆளும் டிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவையை கலைத்தது. அம்மாநிலத்தில் முன்கூட்டியே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட  உள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டோமா என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அக்கட்சியே தற்போது பயத்தில் உள்ளது. சந்திரசேகரராவ்  ஆட்சியில் தெலங்கானாவில் அனைத்து பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களையும் அவர்கள் ஏமாற்றிவிட்டனர். எனவே காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தற்போது காங்கிரசின் கைதான்  ஓங்கியிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை