ஒரே மேடையில் முலாயம் - அகிலேஷ்

தினகரன்  தினகரன்
ஒரே மேடையில் முலாயம்  அகிலேஷ்

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவுடன் டெல்லியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். கடந்த ஆண்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியின் தலைவரும், முலாயமின் சகோதரருமான சிவ்பால் யாதவ் பிரிந்து சென்றார். சமாஜ்வாடி மதசார்பற்ற மோர்சா  என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ள அவர், தனது கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். முலாயம் சிங் தனது சகோதரர் கட்சியின் இணைவாரா, மகன் அகிலேஷ் யாதவுடன்  சேருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சியில் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய முலாயம் சிங் யாதவ், “கட்சி  தொண்டர்கள் ஊழலில் ஈடுபடாதீர்கள். சமாஜ்வாடி வலுவடைந்தால் தான் நாடு, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்” என்றார்.

மூலக்கதை