சிக்கிமின் முதல் விமான நிலையம் இன்று திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிக்கிமின் முதல் விமான நிலையம் இன்று திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து ைவக்கிறார். சிக்கிம் மாநிலத்தில் விமான நிலையம அமைக்க வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு கடந்த 2009ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தலைநகர் காங்டாக்கில் இருந்து 30கி.மீ. தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விமான நிலையத்தை இன்று திறந்து வைக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  மத்திய அரசின் ஆயூஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், ‘‘இங்கிருந்து புறப்பட்டு சிக்கிம் செல்கிறேன். அங்கு பாக்யாங் விமான நிலையத்தை திறந்து வைக்கிறேன். இதன் மூலம், சிக்கிம் நாட்டின் பிற பகுதிகளுடன் விமானப் போக்குவரத்தில் இணையும்” என்றார். அக்டோபர் 4ம் தேதி முதல் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து, இந்த விமான நிலையத்தில் தொடங்க உள்ளது. 

மூலக்கதை