கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்: மேலிட பொறுப்பாளர் தகவல்

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்: மேலிட பொறுப்பாளர் தகவல்

பெங்களூரு: ‘‘கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் சிலர் ராஜினாமா செய்வதாக மிரட்டல்  விடுத்து வருகிறார்கள்’’ என்று காங்கிரஸ் ேமலிட பொறுப்பாளர் வேணுகோபால் கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று வேணுகோபால் அளித்த பேட்டி: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜவினர் கீழ்த்தரமான அரசியல் நடத்தி  வருகின்றனர். இதற்காக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேரடியாக ஆபரேஷன் தாமரை  திட்டத்தின் மூலம் எம்.எல்.ஏக்களுக்கு பண ஆசை காட்டி தங்கள் கட்சியில்  சேர்த்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்.காங்கிரஸ்  எம்.எல்.ஏக்கள் சிலர் கட்சியை விட்டு விலகி செல்வதாக மிரட்டல் விடுத்து  வருகின்றனர். அவர்களிடம் ஆலோசனை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். உட்கட்சியில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளும் பேசி  தீர்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை